நீல வானில் நட்சத்திரங்கள்...!
கார் இருளில் சூரியன்...!
அடை மழை நேர நிலா...!
குளிர் காலத்தில் தாகம்...!
குருடனுக்கு உலகம்...!
செவிடனுக்கு இசை...!
நாத்திகனுக்கு கடவுள்...!
இவை யாவும் இருந்தும் தெரிவது இல்லையாம்..!
எனக்கான உன் காதலைப்போல...!!
சம்மதம்..
அனுதினம்
ஆயிரம்
முறை
கண்
இமைக்கும்
பெண்ணே..
எனக்காக
ஒரு
முறை
இமைத்திட
மாட்டாயோ..!
முறை
இமைத்திட
மாட்டாயோ..!
-பாலகுமாரன்
காதல்...
அதிகாலை தூக்கம் தொலைத்து..
விழித்தவுடன் உன்னைக் காண நினைத்து..
வழி ஓரம் பல தடைகளை தகர்த்து..
அடைந்தேன் உன் இருப்பிடம்..
உன் நிழல் பட்டு கரைந்தேன் அந்நிமிடம்..!!
சூரியனைக் கண்ட மேகம்!!
விதி..
பெண்ணின் விதியை..
இறைவன் எழுதினான்..
ஆணின் விதியை எழுதும் பொறுப்பை..
பெண்ணிடம் கொடுத்துவிட்டான்..
அவள் ஒருவனின் விதியை எழுதும் முன்..
பழகிக் கொள்கிறாள்.. பலரின் மீது!!
நிலையாமை..
துணிவு..
உன் விழியில் விழிப்பதென்றால்..
கனவை துறக்கவும் துணிகிறேன்..!
உன் மடியில் நான் இருந்தால்..
தூக்கத்தை துறக்கவும் துணிகிறேன்..!
உன் மனம் என்னை உணர்ந்துவிட்டால்..
உலகத்தை வென்றிடவும் துணிகிறேன்..!
உன் காதல் எனக்கு மட்டும் என்றால்..
மரணத்தை கடந்திடவும் துணிகிறேன்..!
உன் மகிழ்ச்சி என்னால் குறைந்துவிட்டால்..
உன்னை பிரிந்திடவும் துணிகிறேன்..!
உன் காதல் எனக்கில்லை என்றால்..
உன் நினைவுகளுடன் வாழ்ந்திடவும் துணிகிறேன்..!
அன்றுடன்..
துணிவதை நிறுத்திடவும் துணிகிறேன்..!!!
-பாலகுமாரன்
கடிதம்..
என்னவளே..
கசங்கிய காகிதமும் மோட்சம் பெரும்..
உன் கை எழுத்தைச் சுமந்தால்...!
நீல நிற வானமும் வானவில்லாய் மாறும்..
உன் விழியன் ஒளி பட்டால்...!
குப்பையாகிய மனமும் தூய்மை பெரும்..
உன் நினைவுகளைச் சுமந்தால்...!
துக்க நாளும் மலர்ச்சி பெரும்..
உன் குரலைக் கேட்டால்...!
அரை நொடி பார்வையும் கோடி அர்த்தம் பெரும்..
உன் பார்வையாக இருந்தால்...!
கொடிய மரணமும் இனிமையாக மாறிடும்..
உன் மடியில் இறந்தால்...!
என் கனவுகளும் உயிர் பெறுமே..
உன் விழியன் மொழி புரிந்தால்...!
வாழ்க்கை..
என் வாழ்வில் தினமும்...
விழித்திட மறுக்கும் விழிகளுடன் போராட்டத்தை வென்று...
மனம் முழுக்க இருக்கும் காதலை சொற்களாய் மாற்றி...
கண்ணாடி முன் ஒரு ஒத்திகை!
நேரத்துடன் கனவை மறந்து நினைவுகளைச் சுமந்து...
இயல்பை மறைத்து புது மனிதனாய்ப் பிறந்து...
உலகிற்கு ஒரு வெளிவேஷம்!
இன்றாவுது அவள் விழி மொழியின் அர்த்தம் புரிய...
அந்தச் செய்தியும் எனக்குச் சாதகமாய் அமைய...
கடவுளிடம் அரை நொடி வேண்டுகோள்!
அவள் நிழலைக் கண்டு ஒரு பாதியும்...
விழியன் அபினயங்களைக் கண்டு மீதியும்...
ஒத்திகையும் மறந்து போன அவலம்!
உன்னில் மறைந்த என் மறந்த சொற்களைத் தேட...
எல்லாம் புரிந்தது போன்ற தாக்கம் உன் முகத்தில்...
புதிர் மறையாதா என்ற ஏக்கம் என் மனதில்!
தினம் தொடரும் என் வாழ்க்கை...
அவள் விழியன் சம்மதம் பெரும் வரை!
Subscribe to:
Posts (Atom)