யார் கடவுள்?
கடவுளுக்கு உயிர் இல்லை...
உயிர்கள் இல்லாமல் கடவுளே இல்லை..!!
யார் கடவுள்?
கடவுளுக்கு தேவைகள் இல்லை..
தேவைகள் இல்லாமல் கடவுளே இல்லை...!
யார் கடவுள்?
கடவுளுக்கு உறவுகள் இல்லை..
உறவுகள் இல்லாமல் கடவுளே இல்லை...!
யார் கடவுள்?
கடவுளுக்கு எதிர்பார்ப்புகள் இல்லை..
எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடவுளே இல்லை...!!
யார் கடவுள்?
கடவுளுக்கு விதி இல்லை..
விதி இல்லாமல் கடவுளே இல்லை...!!
யார் கடவுள்?
கற்சிலையிலும் இல்லை..
தீப ஒளியிலும் இல்லை..
வெண்ணிற ஆடையிலும் இல்லை..
வெண்மேகத்திலும் இல்லை..
சிலுவையிலும் இல்லை..
சிவலோகதிலும் இல்லை..!!
யார் கடவுள்?
பண்பு கடவுள்..
பகுத்தறிவு கடவுள்..
நட்பு கடவுள்...
நகைச்சுவை கடவுள்..
நேசம் கடவுள்..
இறக்கம் கடவுள்..
காதல் கடவுள்..
மகிழ்ச்சி கடவுள்..
மனநிறைவு கடவுள்..
அமைதி கடவுள்..
அன்பு தான் கடவுள்...!
இவையாவும் கொண்டவனே கடவுள்!!
இருக்கிறானா?
மனிதன் இருக்கிறான்..!!
மனிதன் இருக்கிறான்..!!
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு நல்லதொரு படைப்பு. என்னைப் பொறுத்தவரையில் சகமனிதனோருவனை சாவினில் உண்மையிலேயே மனம் வெம்பி கண்ணீர் வடிக்க வைத்தால் அவனே கடவுள்... ( உதா: கெளதம் )
ReplyDeleteYeah da!! True :) Manidham Kadavul!!
ReplyDelete