Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

என் உறவு - உன் நட்பு!


கவிதைகள் எழுத தலைப்புகள் குறையும் நேரம் இன்று..
வார்த்தைகள் இல்லா மௌனங்களை ரசிப்பதும் உண்டு..!
முன்னுரைகள் இல்லா முதற்காதலும் உண்டு..
முடிவுரைகள் இல்லா உறவுகளில் உன் உறவும் ஒன்று..!

நிலவோடு மழை வரும் நேரம்

உன் ஒரு நிமிட மௌனம்..
முதற்காதல் முற்றிலும் மறந்திடும் நேரம்..!

உன் ஒரு சொல் கேட்டு என் மௌனம்..
அலைகளை கரைகள் வென்றிடும் நேரம்..!

இசையை மறுக்கும் செவியின் சோகம்..
கனவோடு கண்கள் கலங்கிடும் நேரம்..!

நான் எனதில்லை என்ற எண்ணம் தோன்றும்..
உன் நினைவோடு நெஞ்சம் கனத்திடும் நேரம்..!

நீ என்னை கடந்திட நினைக்கும் தூரம்..
நிலவோடு மழை வரும் நேரம்..!

யார் கடவுள்?

யார் கடவுள்?
கடவுளுக்கு உயிர் இல்லை...
உயிர்கள் இல்லாமல் கடவுளே இல்லை..!!

யார் கடவுள்?
கடவுளுக்கு தேவைகள் இல்லை..
தேவைகள் இல்லாமல் கடவுளே இல்லை...!

யார் கடவுள்?
கடவுளுக்கு உறவுகள் இல்லை..
உறவுகள் இல்லாமல் கடவுளே இல்லை...!

யார் கடவுள்?
கடவுளுக்கு எதிர்பார்ப்புகள் இல்லை..
எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடவுளே இல்லை...!!

யார் கடவுள்?
கடவுளுக்கு விதி இல்லை..
விதி இல்லாமல் கடவுளே இல்லை...!!

யார் கடவுள்?

கற்சிலையிலும் இல்லை.. 
தீப ஒளியிலும் இல்லை..
வெண்ணிற ஆடையிலும் இல்லை..
வெண்மேகத்திலும் இல்லை..
சிலுவையிலும் இல்லை..
சிவலோகதிலும் இல்லை..!!

யார் கடவுள்?

பண்பு கடவுள்..
பகுத்தறிவு கடவுள்..
நட்பு கடவுள்...
நகைச்சுவை கடவுள்..
நேசம் கடவுள்..
இறக்கம் கடவுள்..
காதல் கடவுள்..
மகிழ்ச்சி கடவுள்..
மனநிறைவு கடவுள்..
அமைதி கடவுள்..
அன்பு தான் கடவுள்...!

இவையாவும் கொண்டவனே கடவுள்!! 
இருக்கிறானா?
மனிதன் இருக்கிறான்..!!

நட்பே..

உள்ளங்கள் உணர்ந்து விட்டால்..
மௌனங்கள் நிலைப்பதில்லை...!
நிலையாமை கடந்துவிட்டால்...
உணர்வுகள் நிலைப்பதில்லை...!

உணர்வுகள் கொண்டு செதுக்கும் நட்பிற்கு
உவமைகள் தேவையில்லை..
உன்னதத்தொடு கொள்ளும் நட்பிற்கு 
மரணத்திலும் பிரிவில்லை...!

பொய்மை..

உணர்வுகள் இல்லா உலகத்தில்
உறவுகள் உண்மைகளின்றி பொய்க்கிறதே...!

நித்திரை மறக்கும் கனவுகளில் 
நிஜங்களும் நிலையற்று பொய்க்கிறதே...!

இன்பம் பெருகும் காதலிலும்
இளமை இயலாமையாய் பொய்க்கிறதே...!

உலகம் வியக்கும் என் உயிர் நட்பினிலே
பொய்மையும் பொய்த்துப் போகிறதே!!

நீ இன்றி நான் இல்லை மனமே!!

நின்று பேசிய நிழல்களும் நினைவுகளும்
இன்றும் என்னை சூழ்ந்து நிற்க..!
உடைந்து போன காதலும் நட்பும்
கடந்து வந்த காரணம் ஏனோ..!

என் முதல் காதல் வடுக்களும்..

வறண்டு போன எண்ணங்களும்..
எண்ணக் குமுறல்கள் வீழ்ந்து மடிவது உந்தன் மடியன்றோ..!

வடுக்கள் மறைந்தாலும் தழும்புகள் வாழும்..

மக்கிப்போன மனம் தான் என்றாலும்..
காதல் மீதே காதல் கொண்டவன் நானன்றோ..!

மனிதம்..

வானவில்லின் அழகு..
வண்ணங்களில் மட்டும் அல்ல..
வளைந்து செல்வதிலும் தான்..!!

ஆழ்கடலின் அழகு..
ஆர்பரிப்பதில் மட்டும் அல்ல..
அலைகளின் விடாமுயற்சியிலும் தான்..!!

நீல வானின் அழகு..
பறந்து விரிதல் மட்டும் அல்ல..
அனைவருக்கும் சமமாய் இருப்பதாலும் தான்..!!

மனிதனின் அழகு..
கொள்கையோடு வாழ்வது மட்டும் அல்ல..
விட்டுக்கொடுத்து வாழ்ந்து சிறப்பதும் தான்..!!

மன்னித்திட நான் கடவுளும் அல்ல..
மறந்திட நான் மகானும் அல்ல..!!
அனால்..
மனிதத்துடன்.. விட்டுக்கொடுத்து நட்பை வளர்ப்பவன் தான்!!

ஒரு சொல்

வானம் முழுக்க நிலவைப் பார்த்தவன்..
விண்மீன் தேடி களைத்து போகிறேன்..!
பகலின் நினைவை இரவில் வியந்தவன்..
கனவில் கண்கள் கலங்கிப் போகிறேன்..!
என்னில் விழும் மழைத்துளி ரசித்தவன்..
மார்பில் சாரல் கிழித்து போவதேன்..!

எல்லை அற்ற நட்பு..
உன்னிடம் எல்லை மீறிப் போனதாலோ??
சொல்லின் வலிமை..
உன் ஒரு சொல் ஆனதாலோ??

ஒரு சொல்லில் நட்பை மறுக்கிறேன்..
மறந்திட முடியாமல் துடிக்கிறேன்..!
என் நினைவின் மடியில் தூக்கம் தொலைக்கிறேன்..
நம் நட்பின் இடையில் நினைவைப் புதைக்கிறேன்!!

கவிதை

இரவின் கவிதை.. 
நிலவின் மொழியில்..!
நிலவின் கவிதை..
காதலின் மொழியில்..!
காதலின் கவிதை..
இரவின் மொழியில்..!
 உன் விழிக் கவிதை..
என் வாய் மொழியில்..!
புரிந்திடும் நாள் வரை..
கவியும் நீ..!
அதன் மொழி பெயர்ப்பும் நீ..!
என்றும் கவிதையாய் நீ..!
அன்றும் காதலனாய் நான்!!

தகுதியான தலைப்பு கொடுங்களேன்...!!

முள்ளில் சிக்கிய காகிதமாய்..
மழையில் நனைந்த வழித்தடமாய்..
கரையைத் தொட்ட அலையின் நுரையாய்..
குழந்தையின் விரலில் ஓவியமாய்..
சுனாமி தட்டிப் பார்த்த கடர்கரையாய்..
பூகம்பம் கட்டி ரசித்த மாளிகையாய்..

இதயம் சிதறயிலே..
கடவுள் சிறு புன்னகையுடன்..

மானிடா..
இரும்பிலே ஒரு இதயம் வேண்டும்..!
இயல்பினை மறைக்கா மனிதன் வேண்டும்..!
காதலைக் கொடுக்கா நட்பு வேண்டும்..!
நட்பைக்க் கெடுக்கா காதல் வேண்டும்..!
எனக்கும்  காரணம் வேண்டும்..!
உனக்கும் கருணை வேண்டும்..!

சொல்லி முடித்தான்..
காரணம் தெரியாமலே..
காலங்கள் கடந்துவிட்ட காதலுக்கு பதிலாக..!!!

காலம்..

ஓரிரு நொடிகளில் நகர்ந்திடும் மேகம்..
காரணம் அறியாது கூடிடுமே..
மேகத்தின் சுவடுகள் பதியாதெனினும்..
காலத்தின் கட்டளைகள் பலித்திடுமே..

விண்ணில் இருந்து என்னை நோக்கிய மழைத்துளியாய்..!!

என் உயிரே!


உன்னைப் பெற்றிடவே..
முன்பிறவி தொலைத்து..
புதுப்பிறப்பு எடுத்தேனோ..!!

என்றும் மறையாத தாய் அன்பு..
தளர்வில்லாத தந்தையின் அரவணைப்பு..
இத்தனை இருந்தும்..

மழையின் முதல் துளியாய்..
மாலையின் இளவெயிலாய்..
மலரின் மனமாய்..
தனிமையின் கவிதையாய்..
உறவின் மொழியாய்..
இரவில் நிழலாய்..
மொத்தத்தில் எனக்கே எனக்காய்..
ஒரு ஏக்கம்...!!

மறுபிறவி எடுத்திட துணிந்த வேளையில்..
கிடைதிட்டாய் அறிய பொக்கிஷமாய்..!

காற்றும் நம்மைப் பிரித்துச் சென்றிட மறுக்குமே..
சூரிய ஒளியும் வியந்து நின்று நிழலை ஒன்றாய் கொடுக்குமே..!

மழையின் சாரலாய்..
மாலையில் துணையாய்..
மலரின் வண்ணமாய்..
தனிமையில் இசையாய்..
உறவின் உணர்வாய்...
இரவில் கனவாய்..
மொத்தத்தில் எனக்கே எனக்காய்..!!

இத்தனையுமாய் இருந்த நீ..
உன் பிரிவில்..
என் முதல் துளி கண்ணீரும் ஆகிப்போனாயே..!!
கண்கள் தோய்ந்து..
மரணம் வரும் வேளையிலும்..
உன் நினைவுகளின் சுவடுகள் மறையாதே..!!
என் உயிர் நட்பே..!!

காதல்..

நீ என்னவளாக
என்றுமே விரும்பியதில்லை..
நீ நீயாக இருக்கவே
இன்றும் விரும்புகிறேன்..!!
உன்னிலை மாறினாய்
என்னை வெறுத்திடவே..
என்னிலை மறந்தேன்
நீ என்னை கடந்திடவே!!!

கடவுளின் பதில்!!

மனிதனின் கேள்விகள் சிறியது தான்..
"யார்"           
"எதற்கு" 
"எப்பொழுது"

கடவுளின் பதி்லும் அதை விட சிறியது தான்..
"நீ"
"இதற்கு"
"இப்பொழுது"!!!

உன் காதல்...

நீல வானில் நட்சத்திரங்கள்...!
கார் இருளில் சூரியன்...!
அடை மழை நேர நிலா...!
குளிர் காலத்தில் தாகம்...!
குருடனுக்கு உலகம்...!
செவிடனுக்கு இசை...!
நாத்திகனுக்கு கடவுள்...!

இவை யாவும் இருந்தும் தெரிவது இல்லையாம்..!
எனக்கான உன் காதலைப்போல...!!

சம்மதம்..

அனுதினம் 
ஆயிரம் 
முறை 
கண் 
இமைக்கும் 
பெண்ணே..
எனக்காக 
ஒரு 
முறை 
இமைத்திட 
மாட்டாயோ..!

-பாலகுமாரன்

காதல்...

அதிகாலை தூக்கம் தொலைத்து..
விழித்தவுடன் உன்னைக் காண நினைத்து..
வழி ஓரம் பல தடைகளை தகர்த்து..
அடைந்தேன் உன் இருப்பிடம்..
உன் நிழல் பட்டு கரைந்தேன் அந்நிமிடம்..!!

சூரியனைக் கண்ட மேகம்!!



விதி..

பெண்ணின் விதியை..
இறைவன் எழுதினான்..
ஆணின் விதியை எழுதும் பொறுப்பை..
பெண்ணிடம் கொடுத்துவிட்டான்..
அவள் ஒருவனின் விதியை எழுதும் முன்..
பழகிக் கொள்கிறாள்.. பலரின் மீது!!

நிலையாமை..

சூரியனும் குளிர்ந்திடுமே..
சந்திரனும் உருகிடுமே..
மழைக்கும் வியர்திடுமே..
காற்றுக்கும் கால் வலித்திடுமே..
பூமியும் பாரத்தை உணர்ந்திடுமே..

இவையும் தன் நிலை மறந்தது..
என்னைப் போல..
உன்னைக் கண்டதால்..!!



துணிவு..

உன் விழியில் விழிப்பதென்றால்..
கனவை துறக்கவும் துணிகிறேன்..!
உன் மடியில் நான் இருந்தால்..
தூக்கத்தை துறக்கவும் துணிகிறேன்..!
உன் மனம் என்னை உணர்ந்துவிட்டால்..
உலகத்தை வென்றிடவும் துணிகிறேன்..!
உன் காதல் எனக்கு மட்டும் என்றால்..
மரணத்தை கடந்திடவும் துணிகிறேன்..!
உன் மகிழ்ச்சி என்னால் குறைந்துவிட்டால்..
உன்னை பிரிந்திடவும் துணிகிறேன்..!
உன் காதல் எனக்கில்லை என்றால்..
உன் நினைவுகளுடன் வாழ்ந்திடவும் துணிகிறேன்..!
அன்றுடன்..
துணிவதை நிறுத்திடவும் துணிகிறேன்..!!!


-பாலகுமாரன்