தகுதியான தலைப்பு கொடுங்களேன்...!!

முள்ளில் சிக்கிய காகிதமாய்..
மழையில் நனைந்த வழித்தடமாய்..
கரையைத் தொட்ட அலையின் நுரையாய்..
குழந்தையின் விரலில் ஓவியமாய்..
சுனாமி தட்டிப் பார்த்த கடர்கரையாய்..
பூகம்பம் கட்டி ரசித்த மாளிகையாய்..

இதயம் சிதறயிலே..
கடவுள் சிறு புன்னகையுடன்..

மானிடா..
இரும்பிலே ஒரு இதயம் வேண்டும்..!
இயல்பினை மறைக்கா மனிதன் வேண்டும்..!
காதலைக் கொடுக்கா நட்பு வேண்டும்..!
நட்பைக்க் கெடுக்கா காதல் வேண்டும்..!
எனக்கும்  காரணம் வேண்டும்..!
உனக்கும் கருணை வேண்டும்..!

சொல்லி முடித்தான்..
காரணம் தெரியாமலே..
காலங்கள் கடந்துவிட்ட காதலுக்கு பதிலாக..!!!

5 comments:

  1. என்னவென்று பெயரிட????

    ReplyDelete
  2. hey nice .. காதலை மீட்க தவறிய கடவுள் ithaan enaku paduchathum thonuchu.. ;-)

    ReplyDelete
  3. மாலையில் சூரியனுக்காக காத்திருக்கும் மாணவன்

    ReplyDelete
  4. சரி விடு .........மச்சி

    முடிஞ்சு போன கல்யாணத்துக்கு ஏன் மோளம் அடிக்கிற ....................

    ReplyDelete
  5. @hannah: adhe doubt than enakum!!
    @suba: //காதலை மீட்க தவறிய கடவுள்//

    மீட்க தவறியதும் சுகம் தான்!!

    @prasad: Puriala!

    ReplyDelete